அனுபவம் புதுமை - அமெரிக்காவில் (3)

0 மறுமொழிகள்

அனுபவம் புதுமை

ஒரு புதுவித அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதை படிப்பதற்கு முன் எனது மரியாதைக்குரியவர்கள்(குறிப்பிடும் அளவில் உள்ள வாசகர்கள் சிலருக்கு) தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். தெரிந்த, அறிந்த சில/புது நிகழ்வுகளின் பகிர்வாக மட்டுமே இதைப் பாருங்கள், படியுங்கள்.

அமெரிக்காவில் கேளிக்கை விடுதிகள் எல்லாம் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நண்பர்கள் மற்றும் சென்று வந்த சிலரின் அனுபங்களை விவரித்த பிறகு, அதில் என்ன தான் இருக்கின்றதென்று பார்க்கத் துடிக்கும் ஆவல் வந்தே விட்டது. களவும் கற்று மற என்பதற்கிணங்க கிளப்களில் என்ன தான் பெண்கள் ஆடுகிறார்கள் என பார்க்க முடிவு செய்து அந்த நாளுக்காக காத்திருந்தோம்.
ஏதோ ஒரு நாளில் ( அக் 13) அவசரமாய் கார் ஆறு மணிக்கு மேல் ஸ்டிரிப் டான்ஸ் பார்க்க 4 பேர் அடங்கிய குழு பயணமானது. சுரங்கம் போன்றொரு அலுவலக அறையில் ஆடிக்கொண்டிருப்பார்கள் என்பது போன்ற கற்பனையுடன் சென்ற எனக்கு அதிசயமாயிருந்தது அந்தக் காட்சி. சாலையோரத்தில் அமைந்திருந்த அறையின் கதவைத் திறந்தால், கதவிற்கு ஐந்தடி தூரத்தில் உள்ள மேடையினில் இரண்டு பெண்கள் நிர்வாண ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது தான் அது.
மேடையினில் நடப்பட்ட கம்பை சுற்றி உடல் இடைகளை வலைத்து, இழைத்து சாகசங்களையும் சதைகளையும்(முழுவதும்) காட்டி ஆடும் பெண்களுக்கு டாலர் நோட்டுக்களை வந்து விழுகிறது. விழுவதைக் காட்டிலும் சபையினில் கூடியிருக்கும் ஆண்மகன்களால் பெண்களுக்கு உண்டியலிட(?)ப் படுகிறது. அவ்வாறு உண்டியலிடும் பணத்திற்கு பதிலாய் உங்களுக்கு முத்தான முத்தம், அல்லது உங்கள் முகத்தினை மார்பிலணைத்து அவள்தம் மேனியில் பரவிடும் நறுமணத்தை நுகரலாம்.

இதன் நுழைவுக் கட்டணம் இலவசமாகவோ அல்லது இடத்திற்கேற்றார் போல் மாறுபடும் ஆனால் உள்ளே சென்று சும்ம உட்காரக் கூடாது எதாவது மது வாங்கி அருந்திக் கொண்டிருக்க வேண்டும். மதுபரிமாறும் பணிப்பெண்களும் அன்பாய் அரவணைத்து உபசரிக்கிறார்கள் ஒவ்வோரு பில்லுக்கும் ஒரு டிப்ஸ் கொடுக்கலாம். டிப்ஸை கையில் குடுக்கத் தேவையில்லை, அதனையம் உண்டியலிடலாம் வழக்கம் போல், அவர்களின் விருப்பமும் அதுவே

ஒவ்வோர் பாட்டுக்கும் ஒரு பெண்கள் நடனமாடுகிறார்கள். நடன்மாடும் பெண்கள் தவிர மற்ற பெண்கள் சபையினில் கூடியிருக்கும் ஆண்மகன்களுடன் அரைகுறை ஆடையுடனும், ஆடையெதுவுமின்றியும் கையில் மதுவும், கண்ணில் மயக்கமும், வாயில் புகையுமாய் ஆண்களுடன் கடலை போட்டுக் கொண்டும் சரசம் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கேயும் அவ்வப்போது உண்டியலிடப்படும்.

அடுத்ததாக கூடிக் குலாவிக் கொண்டுக்கும் பெண்களுடன் நீங்களும் ஆடலாம் என்பது. ப்ரகாசமான முகப்பொலிவுடன், மின்னலிடும் புதுப் பொலிவுடன் மகிழ்ச்சி பொங்க 'லைக் டு டான்ஸ்? என கேட்கும் பெண்களின் அழகே தனி. அதற்கான ரேட்டும் தனிதான். ஆங்கிலப் பாடல்கள் அதிர, அங்கங்கள் குலுங்க அதிரடியுடன் ஆடலாம் ஐந்தே நிமிடத்தில் முடியும் பாடலுக்குள் கொடுத்த பணத்திற்கு போதுமானதாய் அணைத்து, அவிழ்த்து (காதால் கேட்டது தான், அனுபவமல்ல..) ஆட்டம் முடிவுக்கு வரும். ஒரு புது விதமான அனுபவம் என்றே சொல்லலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் இது மாதிரியான விடுதிகளுக்கு ஆண்கள் மட்டும் வருவதில்லை. ஆண்களும் பெண்களும் கலந்து வருகிறார்கள் என்பதே.

- சுற்றுவோம்...

மறுமொழிகள்

0 comments to "அனுபவம் புதுமை - அமெரிக்காவில் (3)"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES