யார் அவள் ?

0 மறுமொழிகள்

யார் அவள் ?


என்ற கேள்வி எப்போதும்
என்னை கேள்விகளால்
துளைத்துக் கொண்டிருந்தது.

தூங்கிக் கொண்டிருந்த என்னை
பெண்ணெருவள் அடிக்கடி
பார்த்துக் கொண்டிருந்தாள்.

பார்த்தது மட்டுமின்றி என்னை
பரவசமடையவும் வைத்தாள்.
அவ்வப்போது சிரிப்பதும்,
அடிக்கடி என்னைப் பார்ப்பதும்
என்னை ஏன் இப்படி ?
பார்க்கிறார்கள் என தோன்றியது.

நறுக்கென்று நாலு கேள்வி
கேட்கலாமென்றால் - என்னால்
ஏனோ முடிய்வில்லை.

அவள் மட்டுமின்றி
எண்ணற்றோருக்கு என்னை
அறிமுகமும் செய்து
வைத்திருப்பாள் போல..
என்னைப் பற்றிய சிந்தனையில்
மூழ்கியிருக்கையில்
எத்தனையோ பேர்
பார்த்து பார்த்து
சிரித்தார்கள்.

சிறு புன்னகை ஒன்றை
தவள விட்டவுடன்
மறுபடியும் சிரிக்கிறார்கள்.
எத்தனை முறை தான்
சிரிப்பை பார்த்து சிரிப்பது.

என்ன காரணம் என்று
தெரியவில்லை - ஆனால்
அவளால் தான் என
என் மனம் சொல்லியது.

அருமையான் தூக்கமொன்றை
அனுபவித்துக் கொண்டிருக்கையில்
யாரோ ஒருவர்
என் தலையை வருடிக்
கொண்டிருந்தார்.
திடீரென எழுந்த என்னை
திடுக்கிட வைத்தாள்
திரும்பவும் அவளே...

என்னால் எதுவும்
சொல்லவும் முடியவில்லை.
என்ன சொல்வது என்று
தெரியவும் இல்லை - பின்
யாரோ அழைத்தார்கள் என்று
சென்று விட்டா.

என்ன நடக்கக் கூடாது
என எண்ணினோ - அது
நடந்தே விட்டது.
ஆமாம் -

என்னை அள்ளி
அணைத்து முத்ததையும்
கொடுத்து விட்டாள்.
ஒன்று இரண்டு அல்ல,
சரியாக ஐந்து முத்தங்கள்
அதுதான் ஒரு பெண்ணிடமிருந்து
வாங்கும் முதல் முத்தம்.
முத்தம் அவள் கொடுக்கையில்
சுகமாகத் தானிருந்தது.
ஆனால் அறியாத அவள்
எதற்கு கொடுத்தாள்?
என்ற சிந்தனை ஏனோ
என்னை சிதைத்தது.

முத்தம் கொடுக்கும் அளவுக்கு,
என்ன உரிமை அவளுக்கு
என நான் எண்ணிக் கொண்டிருந்தேன்
செயவதறியாமல்.
தொடர்ந்தது அவளின் -அன்புத்
தொல்லைகள்

அவளின் முகத்தை தான் - நான்
அதிகமாக பார்த்துக்
கொண்டிருந்தேன்.


அவளின் பார்வையை
தொலைக்க எண்ணிய நான்
சில நாட்களில்
தொலைந்தே போனேன்..
அடிமையானேன் அவளிடம்.
அவளைக் காணாவிடில்
அலைபாய்ந்தது என் கண்கள்.
கண்ணிலிருந்து மறைந்தால் எனில்
மனம் எதையோ மறந்தது

என்னைப் போலவே அவள்
இருக்கிறாள் -
அந்த பெண்மை.
என்னை எப்போதுமே
நினைத்துக் கொண்டிருக்கிறாள்
என்பது உண்மை.

உண்மை எப்போதாவது
வெளிவரும் தானே...
என்னுள்
என்னை
சிதைத்துக் கொண்டிருந்த - அந்த
கேள்விக்கும் விடை
கிடைத்தது - அவளின்
மூலமே...
காலை எழுந்ததும்,
வந்த பசியைப் போக்க
இன்று என்ன ?
என நான்
தவித்துக் கொண்டிருந்த
என்னை தழுவி,
அள்ளி அணைத்து,
மடிமேல் அமர்த்தி,
உணவொன்றை எனக்கு
ஊட்டிக்(!) கொண்டிருந்தாள்.

பின் தான் அவள் யாரென
எனக்குச் சொன்னாள் ....."அம்மா சொல்லு......... அம்மா சொல்லு........."

- நிலவன்

மறுமொழிகள்

0 comments to "யார் அவள் ?"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES