வானவில் !

0 மறுமொழிகள்


இனியதோர்
மாலைப் பொழுது

கதிரவன் தன்னின்
செந்நெற் கதிர்களை
வானத்தில் பரப்பி
வீற்றிருந்தது.........!
மேகங்கள் ஆங்காங்கே
குழுக்களாய் சூழ்ந்து
குலவிக் கொண்டிருந்தது..!
சில்லென
சிலிர்ப்பூட்டும் உணர்வை
பூங்காற்று புணர்த்தியது !

திடீரென.....

சிலரின் கவனம்
வானத்தைப் நோக்கியது
என்னவென்று நோக்கினால்,

'வானவில்' வந்திருந்தது .........
தன் வனத்தை வானில் பரப்பி !
வளைவாய்,
பார்க்கத்தூண்டும் ஆவலுடன்
சிலாகிக்கும் காட்சி !
எத்தனை பேர்
என்னைப் பார்க்கின்றனர் ?!
என்ற பெருமை போலும்,
கம்பீரமாய் காட்சி,
கர்வமாய் ஒரு பார்வை !


வானவில்லை ரசித்து விட்டு
கீழ்நோக்கினேன்....

அட.....!

இன்னொரு வானவில்
என் முன்னே நின்று
கொண்டிருந்தது...!
மனித உருவில்.
பெண்ணாய்....!

அத்துனை வண்ணங்களையும்
தன்னில் வரைந்தது போல்
எத்துனை செம்மையாய்
விழிதன்னை கீழ்நோக்கி
விண்முட்டும் அழகுடன்,
அங்கம் அங்கிங்கசைந்து
அழகுடன் அன்னநடையிட்டு
வந்தாள் !

வானவில்லை விட
வனப்பாயிருந்தாள்.!
வானவில்லின் கர்வம்
அவளிடத்தில் இல்லை
அடக்கம் அவளின்
அகத்திலேயே இருந்தது..


மேலே பார்த்தால்
வானவில் காணவில்லை.!

அவளின் முன்னே
போட்டியிட திறமின்றி
மறைந்து விட்டதோ !
தாழ்வு மனப்பான்மை
தன்னை தாழ்த்தி
ஓ(ட்)டி விட்டதோ ?!

'வான்வில் போயிடுச்சு..."
என்றபடி கலைந்தன
வானவில்லை ரசித்த
ரசனைக்காரர்கள்

கைதொடும் தூரத்தில்
கண் மயக்கும் அழகுடன்
வசீகர தோற்றத்துடன்
சிறக்கும் சிறபமாய்
மெனமையாய் மெல்ல
நடையிடும் அவளின்
அழகினை ரசிக்காமல்
வான்நோக்கும் - பின்
கலையும்
இந்த மாமனிதர்களை
என்னவென்று சொல்வது ?!

- நிலவன்

மறுமொழிகள்

0 comments to "வானவில் !"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES