முங்காறு மழே...!

0 மறுமொழிகள்

கன்னடத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கும் முங்காறு மழே படத்தின் 'அனிஸுதிதே யாக்கே நிந்து..' என்னும் பாடலின் இசையைத் தழுவி தமிழில் ஒரு சில வரிகள்....! ( கன்னடத்தின் மொழிபெயர்ப்பு அல்ல...)
மனதில் என்ன மாற்றம் இன்று
மயிலிறகின் சரசம் போன்று
நீயே தான் காரணம் என்று
கூறதான் இருக்குது சான்று..!

ஆஹா என்ன கொடுமை ......ஏனிது ?
என்னை எங்கோ பிரித்தெறிவதுபோல்......
தோணுவதேனோ............ ?
.......................மனதில் என்ன மாற்றம் இன்று


உனை கண்ட நாள் முதல் முதலாய்.....
எனை நானே இழக்கிறேன்..
எண்ணமெல்லாம் எங்கோ சென்று..
தனக்குள்ளே சிரிக்கிறேன்..

உலவும் நிலா போல் உதயமாகிறாய்
உன்னை நானும் கண்டதுமே !
என்ன விந்தை சொல்லு..... சொல்லடி.!
உலகாம் யாவுமே உனக்குதானென்று
எழுதி கொடுத்திடுவேன்..

( மனதில் என்ன..... )


குறிப்பு: இதே கன்னட பாடலை இங்கே கேட்கலாம்.


- நிலவன்

மறுமொழிகள்

0 comments to "முங்காறு மழே...!"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES