வெள்ளிக் கரண்டியுடன் மண்ணில் பிறந்தவளை
அள்ளியணைத்துக் கொஞ்சி அகமகிழ்ந்து
அன்பை பொழிந்து அரவணைப்பை போற்றி
அறியாமை நீக்கீ ஆசையாய் வளர்த்து
கண்ணை என்னிலும் கருத்தை வளர்விலும்
கண்ணும் கருத்துமாய் கவனித்து
தாராள தைரியத்துடன்
தன்னில்லா தன்னம்பிக்கையுடன்
நிமிர்ந்த நடையுடன் நேர் கொண்டு சென்றவளை
சிறு தீ ஒன்று தீண்டி
திகட்ட திகட்ட தீமையளித்து
சிறை தள்ளிய கொடுமை காணீர்....
அறிந்தேயிராத பயமொன்றை
அங்கமெதிலும் பரப்பி
தன்னம்பிக்கையனைத்தும் தளர்த்து
சிறகுகளை ஒடித்து
சின்னாபின்னமாய் சீரழித்த கதை கேளீர்...
சின்ன சின்ன ஆசையுடன்
சிரித்தே பழகிய சிறப்புடன்
சிறகு விரித்து பறக்கும் தருவாயில்
வரன் என்ற வரி தொடங்கி
வகுத்துக் கொண்ட வழியுடன்
வாழ்வை தொடங்கும் முன்பே - அதை
முறித்து முடித்துக் கொண்ட கொடுமை பாரீர்....
சில நேரம் சிரிக்கலாம்
சில நேரம் அழலாம்
சிந்தனையனைத்தும் அழுவதையே
சிந்தித்து.....
அழுவதனைத்தும் மறந்திருந்தவளின்
சிரிப்பை மறக்கச் செய்யும்
சமூகச் சீமான்களின் துரோகம் கேளீர்
ஏமாற்றியவன்
எவனோ ஒருவனென அல்லாது
ஓருயிர் ஈருயிராய் உறவொன்றை ஏற்று
உயிரும் உடலும்
உனக்கே உரித்ததென்று
நெஞ்சை திறந்து நெஞ்சில் பதித்து
ஆடையிழந்தங்கம் காட்டி
அன்பை பொழிந்து
அடிமை கொண்ட
பாசப் பறவையை
பகை காட்டி
பழிபல சுமர்த்தி
அன்பு உள்ளத்தை
அணையா தீயில் கொளுத்திய
கொடுமையின் கொடுமை கேளீர்.....!
(தொடரும்.....)
- நிலவன்
மறுமொழிகள்
0 comments to "புண்பட்ட வெண்புறா !"
Post a Comment