இனிமையே இனிமையாய் !

0 மறுமொழிகள்

பார்ப்பவர்களையும் 
பார்வை படுபவர்களையும் 
பரவசப்படுத்தும் - உன் 
கண்கள் பொலிவுடன்
பரவசப்படுத்திக் கொண்டே
இருக்கட்டும் 

இசையென வந்து விழும் - உன் 
வார்த்தைகள் என்றென்றும் 
இனிமையாய் இன்புற்று 
இருக்கட்டும் 

நதியைப் போன்ற - உன் கூந்தல் 
நலினமான அதன் வடிவம் 
நலிவான அதன் இழைகள் 
நன்றாய் நலமுடனே 
இருக்கட்டும் 

திருடும்
கொள்ளை கொள்ளும் 
அபகரிக்கும் - உன் இதயம் 
எப்பொழுதும் 
மகிழ்ச்சியாகவும் 
மன நிறைவுடையதாக 
இருக்கட்டும் 

உச்சரித்தவுடன்
உற்சாகம் கொடுக்கும் - உன் 
பெயர் உனது 
உறவினர்க்கும் 
உற்றார்க்கும் 
நண்ப நண்பிகளுக்கும் - உரிய 
பாச பந்தங்களை 
பகிர்ந்து கொண்டே
இருக்கட்டும் ! 

மறுமொழிகள்

0 comments to "இனிமையே இனிமையாய் !"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES