27ம் தேதி அக்தோபர் 2007
நியூ யார்க் நகரின் இரவு நேர கேளிக்கை என்ன்வென்று ரசிப்பதற்காக உலா வரச் சென்றோம் நண்பன் முகுந்துடன். ஸ்டிரிப் டான்ஸ் அல்லது எதாவதொரு கேளிக்கை விடுதிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று என்னை அழைத்துச் சென்றான் முகுந்த். சாம்பர்ஸ் தெருவிலிருந்து கேம்பிரிட்ஜ் தெரு சென்று அங்கே நடைபாதையில் நடக்க ஆரம்பித்து ஆங்காங்கே நடந்து கொண்டும் விசாரித்துக் கொண்டும் சென்றோம். மக்கள் கூட்டம் கூட்டமாய் ஆங்காங்கே ஆடிப் பாடிக் கொண்டும், ஜோடியாக நடந்து கொண்டுமிருந்தனர். வித்தியாசமான ஆடைகளுடன், விதவிதமான வேஷங்களுடன் கூடி உலாவிக் கொண்டிருந்தனர் அமெரிக்க இளைஞர், இளைஞிகள்.
பலமுறை பலதெருக்களில் உலவி வந்தும் பயனின்றி எங்களுக்குத் தேவையான கிளப்புகளை காணவில்லை, கண்டும் பிடிக்கவில்லை. ஒரு சில இடங்களில் ஜோடிகளை மட்டுமே அனுமதித்தார்கள், சில இடங்களில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆங்காங்கே விசாரித்ததில் வழிகாட்டிய திசைகளும் வழிமாறிப் போனதெனலாம்.
நடைபயணங்கள் நகர்ந்து டைம்ஸ் ஸ்கொயர் வரை சென்றது. ரயில் நிலைய நிறுத்தததை தேடி அலைந்து நியூயார்க் நகரின் சந்து பொந்துகளுக்குள் பயணித்தோம் எங்களின் நடைபயணத்தை. அந்நேரத்திலும் சரவணபவன் திறந்திருக்கிறதா என்பதை தேடியறிய தவறவில்லை.
டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள ஜென்டில்மேன் எனும் கிளப் செல்லலாம் என விசாரித்ததில் அனுமதிக் கட்டணம் 20$ என்றார்கள். அதைவிட வேறு ஒன்றை பார்க்கலாம் என பார்த்ததில் கடைசிவரை ஒன்றும் சிக்கவில்லை. தேடித் துருவிப் பார்த்ததில் ஒரே ஒரு பார் மட்டும் தான் சிக்கியது. அங்கே சென்று ஒரே ஒரு பீரை உள்ளிறக்கி விட்டு பின் ரயிலிலேறினோம்.
ரயில் நிலையங்களில் இரவு ஒரு மணிக்கும் கணிசமான மக்கள் கூடியிருந்தனர். ஒரு சிலர் ஆங்காங்கே ஆட்டம், பாட்டம், வேடிக்கை என இரவில் ரயிலுக்கு காத்திருக்கும் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தனர். கருப்பர்களின் இடுப்பை வளைத்து ஆடும் ஆட்டம் அருமையாயிருந்தது. வளைத்து நெளித்து ஆடும் ஆட்டமும், அதற்கு தகுந்தாற் போல் கொடுக்கும் இசையும் நம்மையும் ஆடத்தூண்டும் வகையில் இருந்தது. ஆட்டத்தை ரசித்து விட்டு ரயிலேறினோம்.
ஆங்காங்கே அலைந்து திரிந்து அலுப்புடன் வந்து சேர்ந்ததில் வழிப்போக்கர்களை ரசித்ததுடன் கால் வலி மட்டும் மிச்சமாயிருந்தது.
இரவு நேர நியூயார்க் - அமெரிக்காவில் (6)
Subscribe to:
Post Comments (Atom)
மறுமொழிகள்
0 comments to "இரவு நேர நியூயார்க் - அமெரிக்காவில் (6)"
Post a Comment