தமிழ் புத்தாண்டு வாழ்த்து !

0 மறுமொழிகள்

தமிழ்ப் புத்தாண்டு - மனதில்
அமிழ்தாய் ஆட்கொண்டு
சிறக்கட்டும் பார்த்திப ஆண்டு


புத்தம் புதிதாய்
புத்துணர்ச்சிக் கடலாய்
பூகம்ப நிகழாய்
பிறக்கின்றாய் ஒவ்வோர் ஆண்டும்
சிறக்கின்றாய் எங்களை ஆண்டு !

தொன்மையான உன் மொழி
காட்டிடும் சிறந்த வழி
பனமையான உன் இயல்
பாரே சிறக்கும் செயல்

தமிழ் எங்கள் பேச்சு,
தமிழே எங்கள் மூச்சு
அகிலம் முழுதும் தமிழே என ஆச்சு

எண்ணங்களை வருடும் - இப்
பார்த்திப வருடம்
பலன் பல செய்து
பாரினில் சிறந்து
பறந்தெங்கும் விரிந்து
சிறந்திட
வணங்கி வாழ்த்துகிறோம்,
வரவேற்போம் - எங்கள்
தாயே !


பிறந்திடும் நன்னாளில்
அகிலம் முழுதும்
அனைத்தும் பெற்று
வாழ்க்கை வளமுற்று
இயற்கை சிறப்புற்று
பெருமை நிலைப்பெற்று
இனிதே அனைத்தும்
சிறந்தே அமைந்திட
வாழ்த்தி வணங்குகிறோம் தாயே !

மறுமொழிகள்

0 comments to "தமிழ் புத்தாண்டு வாழ்த்து !"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES