நட்டமென எதிலும்
நாட்டம் அற்ற போதிலும்
நட்பென்று எத்துனையோ
நாடி வந்த போதிலும்,
உறவுகள் கோடி
உண்டென போதிலும்
உனக்கென ஓரிடம்
உரிமம் தந்த போதிலும்
உன் விருப்பம் அனைத்தையும்
விரும்பிய போதிலும்
எனை வெல்ல வாய்ப்புகள்
எடுத்துக் கொடுத்த போதிலும்
தூரோகம் எனும் துணை கொண்டு எனை
துரத்தி விட்டேதனடா ?
வரும் துன்பம் யாவையும்
கன நேரம் துடைத்தெறிந்த
திறனிலும்
பெரும் துயர் ஒன்றெனை
கனம் கொண்டெனை தாக்கிய
போதிலும்
கலங்கிடா நான் - உன்
'துரோகம்' கண்டு
துடிக்கிறேன் ..
'திறன்' கண்டு மனம்
திரிகிறேன் ..
நட்பின் நாட்கள் தோன்றி
நானுகிறேன்.
உன் நிலை கண்டு - நானெதுவும்
உறுதி ஏற்கவில்லை
காலத்தின் கைகளில் கொடுத்து
காத்திருக்கிறேன்.
துரோகம் !
Subscribe to:
Post Comments (Atom)
மறுமொழிகள்
4 comments to "துரோகம் !"
September 5, 2009 at 4:47 AM
September 5, 2009 at 4:48 AM
September 5, 2009 at 4:50 AM
வணக்கம் நிலவன்
உண்மை தான் . சில விசயங்களில் நாம் முடிவு எடுப்பதை விட காலத்தின் கைகளில் கொடுப்பது தான் நல்லது ...
காலம் ஆறாத ரணங்களையும் ஆற வைக்கும்...
September 5, 2009 at 7:04 PM
தாங்களின் கருத்துக்கு நன்றி கணேசன்..
Post a Comment